News January 17, 2026

தி.மலை: குளிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

image

ஆரணி, குன்னத்தூரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கிணற்றுக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால், அங்கிருந்தவர்கள் ஊருக்குள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரைத் தேடிய நிலையில், நேற்று காலை 10 மணியளவில் பிணமாக தமீம் அன்சாரி உடலை மீட்டனர்.

Similar News

News February 7, 2026

தி.மலை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

தி.மலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத தேவையில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. *இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

News February 7, 2026

செய்யாறில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்

image

செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, மற்றும் தனியார் பள்ளி முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இந்த முகாமில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 7, 2026

தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தி.மலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 10th தேர்ச்சி பெற்றவர்கள்/பெறாதவர்கள், மேல்நிலைக்கல்வி, முடித்தவர்கள், பட்டதாரிகள், மாற்றுத்தினாளிகளும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் பிப்.27 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!