News March 31, 2024
தி.மலை: கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர்

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Similar News
News February 13, 2026
தி.மலையில் 800 பேர் கூண்டோடு கைது

தி.மலை மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் 9 இடங்களில் நடந்தது. தி.மலை, ஆரணி, சேத்துப்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் நேற்று இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட சுமார் 800 பேரை போலீ சார் கூண்டோடு கைது செய்தனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
News February 12, 2026
திருவண்ணாமலை அரசு கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா!

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் நாளை பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய இரு நாட்கள் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆகையால் பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 இரண்டு நாளுமே இளங்கலை மற்றும் முதுகலை (முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி) மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. என கல்லூரியின் முதல்வர் ரேவதி அம்மையார் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


