News December 29, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
தி.மலை: முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்து கொலை

செங்கம் அருகே கனிகாரன் கொட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், புதுப்பட்டு சாலையிலுள்ள மதுபான கடையில் தனது நண்பரோடு மது அருந்தியுள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில் ரமேஷை அவரது நண்பர் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரமேஷின் நண்பரை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 29, 2025
திருவண்ணாமலை: 15 பேர் அதிரடி கைது!

செய்யாறு கருணாநிதியின் சிலையைத் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது செய்யாறைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜனதா நிர்வாகிகள் 15 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தனர். அவர்களைத் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
தி.மலை: குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவன் பலி!

வெம்பாக்கம் அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் (14), ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற பெற்றோர், ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கியிருந்த லிங்கேஷை மீட்டனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


