News June 16, 2024
தி.மலை: கார் விபத்து – 3 பேர் பலி

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வந்த கார் நேற்று காலை போளூர் சாலை வசூர் அருகே புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News March 9, 2026
தி.மலை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <
News March 9, 2026
தி.மலை: கைக்குழந்தையுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பெரியார் தெருவை சேர்ந்த நடராஜன் (38), அவரது மனைவி பிருந்தா (28) ஆகியோர் தொழில் தொடங்க தாட்கோவில் கடனுக்கு முயற்சி செய்துள்ளனர். லோன் கிடைக்க தாமதமானதால், கைக்குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 9) மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களைத் தடுத்து, கைது செய்தனர்.
News March 9, 2026
தி.மலையில் 250 கோழிகள் இலவசம்!

திருவண்ணாமலை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


