News August 17, 2025

தி.மலை: காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

image

தி.மலை மாவட்டம் செங்கம் வட்டம் பிஞ்சூர் கிராமத்தில் சுமார் பத்து நாளைக்கு முன்பு காணாமல் போன (லேட்) ஏழுமலை தந்தையான குப்புசாமி கண் குறைபாடு காரணமாக காணாமல் போனார். அவரை ஊர் எங்கும் சுற்றி பொதுமக்களும் காவல்துறையும் தேடி வந்தனர். இந்நிலையில், குப்புசாமி விவசாயக் கிணற்றில் பிணமாக மிதந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் சம்பவம் குறித்து செங்கம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

Similar News

News March 10, 2026

தி.மலையில் தவெக பொதுக்கூட்டம்!

image

வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழக நெசவாளர் அணி சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும், அமராவதி சில்க்ஸ் உரிமையாளருமான சி.மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலா ளர் கார்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் உதயகுமார் கட்சி கொடி யேற்றி வைத்து பேசினார்.

News March 10, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(23). வேன் டிரைவரான இவர், வந்தவாசி அருகே சாலவேடு கிராமத்தைச் சேர்ந்த தக்காளி வியாபாரி மணிகண்டனிடம் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் அதிகாலை வியாபாரத்திற்கு செல்ல மணிகண்டன் வீட்டு மாடியில் ஆறுமுகம் தங்கியிருந்தார். அப்போது கீழே வரும் போது தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!