News February 24, 2026
தி.மலை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் நாளைக்குள்(பிப்.25) தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். பதிவேற்றம் செய்யப்படாத பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் பி.எம்.கிசான் 22-ஆவது தவணை நிதி உதவி பெற இயலாது. ஆகையால், விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News February 25, 2026
தி.மலை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News February 25, 2026
தி.மலை: செலவு இல்லாமல் கேஸ் போடலாம்

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News February 25, 2026
தி.மலையில் காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

திருப்பத்தூர் நக்சல் பிரிவு இன்ஸ்பெக்டர் துளசி மணி, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அங்கு பணியாற்றிய அன்பரசி, ஆரணி நகர காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சைபர் க்ரைம் ஆய்வாளர் கவிதா, அவலூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


