News September 22, 2025

தி.மலை: கடத்தலில் ஈடுப்பட்ட காவலர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அரிய வகை எறும்புத்தின்னியை வேட்டையாடி, அதன் செதில்களை விற்க முயன்ற ஜமுனாமரத்தூர் தீயணைப்பு வீரர் ஜெயபால் உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். புரோக்கர்கள் போல் நடித்து வனத்துறையினர் அவர்களைப் பிடித்தனர். சுமார் 3 கிலோ எடையுள்ள செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தப்பி ஓடிய ராஜசேகர் என்பவரைத் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இன்று (செப். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்டன.

News September 22, 2025

தி.மலை: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

தி.மலை மாவட்ட பெண்களே! பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

தி.மலையில் தரிசிக்க வேண்டிய 5 முக்கிய கோயில்கள்!

image

தி.மலையில் தரிசிக்க வேண்டிய 5 முக்கிய கோவில்களை இங்கு காணலாம். 1.அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 2.அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், தி.மலை 3.அருள்மிகு பாண்டுரங்கன் கோயில், தென்னாங்கூர் 4.அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு 5.அருள்மிகு கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி. உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!