News December 11, 2025

தி.மலை: இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி!

image

திருவண்ணாமலை–போளூர் சாலையில் 2020ல் நடந்த விபத்தில் ஹரி உயிரிழந்த வழக்கில், முதலில் 18 லட்சமும் பின்னர் மேல்முறையீட்டில் 23 லட்சமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால், இன்று நீதிமன்ற அதிகாரிகள் சென்னையிலிருந்து போளூர் சென்ற 204 தடம் எண் அரசு பேருந்தை, ஆரணி டவுன் பகுதியில் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட்டது.

Similar News

News December 13, 2025

BREAKING தி.மலை அருகே பயங்கர விபத்து; இருவர் பலி!

image

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமம் அருகே இன்று (டிச.13) வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில், இரண்டு கார்கள் & ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த அம்சாபாய் & அன்சர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 13 பேர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News December 13, 2025

தி.மலை: சொந்த ஊரில் வேலை; ரூ.40,000 வரை சம்பளம்!

image

தி.மலை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கீழ் இயற்கை மருத்துவ ஆலோசகர், பார்மசி, பல் மருத்துவர், பல் உதவியாளர், உதவியாளர், ஆலோசகர் பணிக்கு 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பும், மற்ற பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.8,950-ரூ.40,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News December 13, 2025

தி.மலை:ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு நாளை டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!