News September 12, 2025

தி.மலை இளைஞர்களே வேலை ரெடியா இருக்கு!

image

திருவண்ணாமலை வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், நாளை(செப்.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 5,000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம்.

Similar News

News September 12, 2025

தி.மலை: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

திருவண்ணாமலை மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த <>இணையதளம் மூலம்<<>> பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். SHARE பண்ணுங்க

News September 12, 2025

தி.மலை: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு ரூ.6 கோடியில் வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்.11 விசாரணைக்கு வந்தது. கடைகள் பக்தர்களின் நெரிசலுக்கு காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் வணிக வளாக வரைபடத்தை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டு, விசாரணை செப்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

News September 12, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயில் – மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளியில் 2025–26 மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இளம் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிக்கு தகுதியான மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதியுடன், முழுநேர மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000, பகுதி நேர மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் 15.9.2025க்குள் கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

error: Content is protected !!