News August 15, 2025
தி.மலை: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
Similar News
News August 15, 2025
சிறுமி வன்கொடுமை; வாலிபருக்கு சாகும் வரை சிறை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் அரவிந்த்(20). இவர் கடந்த 7.3.2020அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று அந்த மனித மிருகத்திற்கு வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து, தி.மலை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News August 15, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்,

“திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்க ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் தலைமையில் வழிநெடுகிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
News August 15, 2025
இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 14/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.