News September 23, 2025
தி.மலை: இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வழியாக கோயம்புத்தூரில் இருந்து செய்யாறு நோக்கி அருண்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எதிர்திசையில் மேல்புழுதியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ராகவன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தனூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், செய்யாறைச் சேர்ந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News September 23, 2025
தி.மலை: உங்கள் தொகுதி MLA-க்களை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதன்படி, தி.மலை-எ.வ.வேலு (DMK) செங்கம்-மு.பெ.கிரி (DMK) கீழ்பென்னாத்தூர்-கு.பிச்சாண்டி (DMK) கலசபாக்கம்-பெ.சு.தி.சரவணன் (DMK), போளூர்-எஸ்.எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி (ADMK) ஆரணி-எஸ்.இராமச்சந்திரன் (ADMK) செய்யார்-ஒ.ஜோதி (DMK) வந்தவாசி-எஸ்.அம்பேத்குமார் (DMK) ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பணிக்காலம் 2026 வரை உள்ளது.(SHARE)
News September 23, 2025
தி.மலை: EB கட்டணத்தை இனி ஈஸியாக குறைக்கலாம்!

தி.மலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News September 22, 2025
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இன்று (செப். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்டன.