News February 24, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2026
திமுக கோட்டையா தி.மலை?

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. அதேபோல் 2024 MP தேர்தலிலும், தி.மலையில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 2.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றார். இது இந்த மாவட்டத்தின் மீது திமுக கொண்டுள்ள பிடியைக் காட்டுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் TVK, PMK திமுக கோட்டையில் விரிசலை ஏற்படுத்துமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 1, 2026
ஆரணியில் அதிரடி கைது

ஆரணி அருகே ஆரணி–வேலூர் சாலையில் ஜெயலட்சுமி(45) என்பவரிடம் 7 சவரன் தங்க நகையை டூவீலரில் வந்த இருவர் பறித்து சென்றனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (26), மதன் குமார் (30) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News March 1, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் ராணிப்பேட்டை, கோவையில் அழகு கலை பயிற்சி வழங்கப்படுவதாக தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இதில் 8ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது உடையவர்கள் பங்கேற்கலாம். தங்கும் இடம், உணவு உள்ளிட்ட செலவுகளை தாட்கோவே ஏற்கும். பயிற்சி காலம் 90 நாட்கள். ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலை. விருப்பமுள்ளவர்கள் <


