News February 27, 2026
தி.மலை: இனி மின் புகார்களுக்கு அலைய வேண்டாம்!

தி.மலை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
Similar News
News February 28, 2026
தி.மலை: லஞ்சம் பெற்ற நில அளவையர் அதிரடி கைது

போளூர் தாலுகா அலுவலகத்தில் டவுன் நில அளவையராக பணியாற்றி வரும் சக்திவேல் நேற்று (பிப். 27) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் பகுதியை சேந்த சின்னராசு என்பவர், தனது பாகப்பிரிவினை செய்யப்பட்ட வீட்டை அளக்க அணுகியபோது சக்திவேல் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அவரை கைது செய்தனர்.
News February 28, 2026
தி.மலை: பெண்ணை அடித்து உதைத்து கொடூரம்

செய்யாறு; பில்லாந்தி ஊராட்சி தேவானத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சட்ட வழியில் போராடி வருபவர் கல்பனா. இவரை, ஆக்கிரமிப்பாளர்களான குமாரி, கீதா, ஏழுமலை, முருகன் ஆகியோர் கட்டை மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த கல்பனா மீட்கப்பட்டு, தற்போது ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News February 28, 2026
திருவண்ணாமலை: இரவு நேர ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், தங்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டளோ, அவசர காலத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


