News September 7, 2025
தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (04175-233431). ஷேர் பண்ணுங்க
Similar News
News September 8, 2025
தி.மலை: WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News September 8, 2025
தி.மலை: கஞ்சா தகராறு – இளைஞர் கொலை

தி.மலை மாவட்டம் செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அப்சல் (22) கஞ்சா விற்பனை தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இரு சிறார்கள், கல்லூரி மாணவர் உட்பட 16 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறார்கள் கடலூர் சீர்திருத்தப் பள்ளிக்கும், மற்றவர்கள் வேலூர் மத்திய சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.
News September 8, 2025
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டிற்கான, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (தாக்அதாலத்), திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அஞ்சல் துறை சார்ந்த தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 12.9.2025 க்குள் அனுப்பி வைக்கலாம் என தி.மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.