News January 12, 2026
தி.மலை: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
தி.மலை: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

தி.மலை மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.
News January 30, 2026
திருவண்ணாமலையில் நாளை பவர் கட்!

திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(ஜன.31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, தென்னரசம்பட்டு, வேங்கிக்கால், வள்ளிவாகை, ஊம்சாம்பாடி, கிளியாப்பட்டு, துர்க்கை நம்மியந்தல், சானானந்தல், வட ஆண்டாபட்டு, குண்ணியந்தல், வட அரசம்பட்டு, நொச்சிமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். (SHARE IT)
News January 30, 2026
தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


