News August 6, 2025

தி.மலை ஆட்சியர் எம்.பி யை சந்தித்தார்

image

தில்லி இல்லத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் A.ராஜாவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் நேற்று 05/08/2025 செவ்வாய்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அரசு அலுவலர்கள் துணை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். மேலும் அவர்களுக்குள் சிறிது நேரம் பல்வேறு ஆலோசனைகளும் நடைபெற்றது.

Similar News

News August 6, 2025

தி.மலையில் பேராசிரியர்கள் போரட்டம்

image

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றிட கூறி தமிழக அரசினை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட்.06) கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு கோஷமிட்டு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்கள்.

News August 6, 2025

தி.மலை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

image

தி.மலை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <>இந்த லிங்கில் <<>>உங்கள் புகார்களை பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்புக்கு 1967 (அ) 18004255901. ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க

News August 6, 2025

இந்திய வங்கிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

image

இந்தியன் வங்கியின் அப்பரண்டிஸ் பயிற்சிக்கு 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்கி பணிக்கு செல்லும் கனவோடு தேர்வுக்கு தயாராகி வரும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!