News May 7, 2025

தி.மலை அறங்காவலர் நியமனத்தை ரத்து செய்த நீதிமன்றம்

image

தி.மலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும், அதன் பின்பே தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜீவானந்தம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். *பக்தர்களுக்கு பகிரவும்*

Similar News

News August 21, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிட மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வம் தி.மலை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சிராஜ் பாபு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுவாரியம் துணை ஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

News August 21, 2025

தி.மலை: தாசில்தார்,VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) திருவண்ணாமலை மாவட்ட அலுவகத்தை (04175-232619) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க*

News August 21, 2025

செம்மறி ஆடு ,வெள்ள ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம்

image

திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மையத்தில் நாளை (22ம் தேதி) செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடக்கிறது. கட்டணம் ரூ.500 + 18% ஜிஎஸ்டி உண்டு . கலந்து கொள்வோருக்கு உணவு, சிற்றுண்டி, சான்றிதழ், புத்தகம் வழங்கப்படும். முன்பதிவு இன்று (21ம் தேதி) மாலைக்குள் அவசியம். தொடர்புக்கு: 04175-298258, 95514-19375.

error: Content is protected !!