News April 16, 2024
தி.மலை அருகே விபத்து; பலி

போளூர் அடுத்த கேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் உடல் நலக்குறைவால் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது, தச்சாம்பாடி பேருந்து நிலையம் அருகே குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News February 19, 2026
தி.மலையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

தி.மலை மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (TAICO), TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
தி.மலை: பக்கோடா சாப்பிட சென்றவருக்கு அடி உதை!

செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தீனா (24). இவர் கடந்த 15-ந்தேதி பாராசூர் கூட்ரோட்டில் உள்ள கடைக்கு சிக்கன் பக்கோடா சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கீழ்மட்டை கிரா மத்தை சேர்ந்த அருண்குமார் (23), சந்துரு (23) ஆகிய இருவரும் கடைக்காரர் ரேணு என்பவரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்கள். இதை தீனா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தீனாவை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.
News February 19, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற 22-ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 120-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 7000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தவுள்ளன. 18 -35 வயதுடைய வேலை தேடுவோர் முகாமில் பங்கேற்கலாம் என தி.மலை ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


