News August 24, 2024

தி.மலை அருகே விபத்தில் ஓட்டுநர் மரணம்; 30 பேர் காயம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெங்கட்ராயன்பேட்டையில் இன்று தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News March 4, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களாகவும், 18 முதல் 32 வயது வரை நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

ஆரணியில் மும்முனை போட்டி

image

ஆரணி தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. 2021-ல் வெறும் 3,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக இங்கு தோல்வியடைந்தது. இந்நிலையில், புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆரணியில் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புக்கும் சவாலாக அமையலாம். ஆரணி தொகுதி இந்தமுறை யாருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

News March 4, 2026

தி.மலை: தூக்கில் தொங்கிய ஆண் சடலம்

image

ஆரணி அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியின் மகன் புஷ்பநாதன் (49). இவர் மது குடிப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் தனி வீட்டில் தங்கி வந்துள்ளனர். இலையில், புஷ்பநாதன் தன் தனத்தையிடம் உங்களிடம் இருக்கும் 3 வீட்டில் ஒரு வீடை தனக்கு தருமாறு கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!