News May 21, 2024
தி.மலை அருகே திருட்டு

திருவண்ணாமலை அடுத்த செல்வ விநாயகர் பகுதியில் வசிக்கும் சுந்தரமூர்த்தி மகன் ஆனந்தன் என்பவர் வீட்டில் 9. 5 பவுன் நகை மற்றும் 4,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து ஆனந்தின் தந்தை சுந்தரமூர்த்தி கொடுத்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களால் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
தி.மலையில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <
News August 20, 2025
தி.மலையில் இ- ஸ்கூட்டர் மானியம் பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். *உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
தி.மலை கோயிலின் அரிய பெருமை தெரியுமா?

திருவணாமலைக்கு நவதுவாரபதி என்ற பெயர் உண்டு. நவம்- ஒன்பது, துவாரம் – வாயில்கள், பதி – அரசன். ராஜ கோபுரம், பேய் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், தெற்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், வடக்கு கட்டை கோபுரம் என இங்குள்ள 9 வாயில்களுக்கு அரசனாக சிவன் இருப்பதால் நவதுவாரபதி என அழைக்கப்படுகிறது. நம்ம திருவண்ணாமலை பெருமையை ஷேர் பண்ணுங்க