News March 24, 2025

தி.மலை அருகே தவறி விழுந்து பெயிண்டர் பலி

image

சென்னை கிழக்கு தாம்பரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (38), பெயின்டர். இவர், தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்செட்டிபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 9, 2025

கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கிரிவலப் பாதையில் தினமு‌ம் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பங்குனி மாத கிரிவலப் பௌர்ணமி 12-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4:15 மணிக்கு தொடங்கி மறுநாள் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:08 மணிக்கு நிறைவடைகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 9, 2025

தி.மலையில் ICICI வங்கியில் நிதி ஆலோசகர் வேலை

image

தி.மலையில் இயங்கி வரும் ICICI வங்கியில் நிதி ஆலோசகருக்கான 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 25-60 வயதுக்குள் இருக்கும் எல்லா பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர வேலையான இதற்கு SSLC முடித்திருந்தால் போதுமானது. வரும் ஜூன் 11ஆம் தேதி வரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>இந்த <<>>லிங்க் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 9, 2025

ஆரி எம்பிராய்டரி, ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக தாட்கோ மற்றும் தனியார் அகாடமி இணைந்து சென்னை வேளச்சேரியில் டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளி கைத்தொழில் பயிற்சி வழங்குகின்றன. 18-30 வயதினருக்கான இந்த 30 நாள் பயிற்சிக்கான தங்கும், உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். விண்ணப்பிக்க: [www.tahdco.com] இந்த தகவலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

error: Content is protected !!