News April 3, 2024
தி.மலை அருகே இருவர் கைது

சாத்தனூர் வனச்சரகம் பூ மலை காப்புக்காட்டில் வனச்சரக பணியாளர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டை ஒட்டி கிணற்றில் விழுந்த சிறிய புள்ளி மானை எடுத்து அறுத்து கூறு போட்டு கறியை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கைது செய்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இருவருக்கும் தலா 30 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.
Similar News
News February 16, 2026
தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தி,மலை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
தி.மலையில் அதிரடி கைது!

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சளுக்கை கிராமம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது இங்கு நின்று கொண்டிருந்த சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) போலீஸை கண்டதும் ஒட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தில் 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. வசந்தகுமாா் கைது செய்த போலீஸ் அவரின் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
News February 16, 2026
தி.மலை அருகே மாணவர்கள் துடித்து துடித்து பலி

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே வீடி இடிந்து விழுந்ததில் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இளங்காட்டில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தாத்தாவின் வீட்டு சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரு சகோதர்கள் மீது சுவர்கள் இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


