News September 27, 2024
தி.மலையில் 61.7 மி.மீ மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 61.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதில், அதிகபட்சமாக கலசப்பாக்கம் 17 மி.மீ, குறைந்தபட்சமாக செய்யார் 1 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 12 மி.மீ, தண்டராம்பட்டு 11 மி.மீ, போளூர் 7.5 மி.மீ, திருவண்ணாமலை 6.6 மி.மீ, செங்கம் 2.2 மி.மீ, வெம்பாக்கம் 2.0 மி.மீ, சேத்பட் 1.4 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
Similar News
News November 20, 2024
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த தி.மலை எம்பி
தி.மலை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் ஆராஞ்சி ஊராட்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி,சி.என் அண்ணாதுரை எம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார். உடன் ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News November 20, 2024
திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு
தி.மலை தீபத் திருவிழாவுக்காக தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கார் நிறுத்தும் வசதிகளை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கார் நிறுத்தும் பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
News November 19, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.