News September 8, 2025
தி.மலையில் 30 ஆட்டோக்கள் பறிமுதல்

திருவண்ணாமலை நகரில் நேற்று (செப்டம்பர் 07) பௌர்ணமி தினத்தை ஒட்டி உரிய ஆவணங்கள் இன்றி ஏராளமான ஆட்டோக்கள் இயங்கின. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. தொடர்ந்து கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி தலைமையிலான அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது ஆவணம் இன்றி இயங்கிய 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News September 9, 2025
தி.மலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 8, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
தி. மலையில் சக்திவாய்ந்த முருகன் ஆலயம்!

தி.மலை, சோமாசிபாடியில் குன்றின் மீதுள்ள பாலசுப்பிரமணி கோயிலில் 3 தீர்த்தங்கள் உள்ளது. கிருத்திகை தினங்களில் மாலை நேரத்தில் தீர்த்தத்தில் செங்கழுநீர் கொடி வேர்ப்பாகத்தில் மலர்ந்துள்ள பூவினை தேடுவர். சிறிய அரும்பு ஒன்று கிடைக்கும். இந்த பூ பச்சை நிறத்தில் இருந்தால் நல்ல மழை பெய்யும் என்று நம்பப்படுகிறது. இந்த பூ எடுக்கும் நிகழ்வை கண்டால் சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!