News December 26, 2025
தி.மலையில் முதல்வருக்கு அமைச்சர் எ.வ.வேலு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (டிச.26) இன்று வருகை தந்தார். அவரை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொன்னாடை அணிவித்து மரியாதையுடன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற உள்ள மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்க உள்ளார்.
Similar News
News January 4, 2026
தி.மலை: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை!

ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) வேலூர் சாய்நாதபுரம் பகுதியில், கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோருடன் வாடகை வீட்டில் தங்கி வந்தார். கல்லூரி மாணவர். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
News January 4, 2026
தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.