News July 7, 2025
தி.மலையில் மின்வேலியால் தொழிலாளி பலி!

வந்தவாசியை அடுத்த அதியனூரை சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (48). இவரது விவசாய நிலத்தில் உள்ள நெற்பயிரை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் சட்டவிரோதமாக வயலில் மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த குப்பன் (43) என்பவர் நேற்று காலை அந்த நிலத்தின் வழியாக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும்<
News July 6, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு (ஜூலை 6) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.