News August 13, 2024
தி.மலையில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து கூட்டம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மாவட்ட அளவிலான வாதுரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை நீதிபதி மதுசுதனன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவானுபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அதனை காக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
Similar News
News March 4, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களாகவும், 18 முதல் 32 வயது வரை நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
ஆரணியில் மும்முனை போட்டி

ஆரணி தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. 2021-ல் வெறும் 3,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக இங்கு தோல்வியடைந்தது. இந்நிலையில், புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆரணியில் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புக்கும் சவாலாக அமையலாம். ஆரணி தொகுதி இந்தமுறை யாருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.
News March 4, 2026
தி.மலை: தூக்கில் தொங்கிய ஆண் சடலம்

ஆரணி அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியின் மகன் புஷ்பநாதன் (49). இவர் மது குடிப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் தனி வீட்டில் தங்கி வந்துள்ளனர். இலையில், புஷ்பநாதன் தன் தனத்தையிடம் உங்களிடம் இருக்கும் 3 வீட்டில் ஒரு வீடை தனக்கு தருமாறு கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


