News January 21, 2026
தி.மலையில் துடிதுடித்து பலி!

கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் காலனியைச் சேர்ந்த சஞ்சய்(22), குமார்(22) ஆகியோர் பைக்கில் கடந்த ஜன.18ஆம் தேதி வண்ணாங்குளம் பஜார் பகுதியில் சென்றனர். அப்போது, வேலூர் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்கு அனுமதித்த போது சஞ்சய் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 26, 2026
தி.மலை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

தி.மலை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
குடியரசு தின விழாவில் சுகாதார துறை சார்பில் விருது

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் 77வது குடியரசு தினத்தை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதாரத் துறை சார்பாக, கொழப்பலூர் வட்டார மருத்துவ அலுவலர் M.அருண்குமார் சிறந்த மருத்துவராகவும், மடம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் N.ஆனந்தன் சிறந்த மருந்தாளுனராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மா.சுகாதார அலுவலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
News January 26, 2026
தி.மலை: ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க


