News September 16, 2025

தி.மலையில் கார்த்திகை தீபம்: முக்கிய அப்டேட்!

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இந்த ஆண்டு நவம்பர் 22 முதல் டிசம்பர் 7ம் தேதி வரை கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் செப்டம்பர் 24ம் தேதியன்று ராஜகோபுரம் முன்பு பந்தகால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்ணாமலையாரின் அருளை நாடி கோயிலுக்கு செல்லும் உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 16, 2025

தி.மலை: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

தி.மலை மக்களே! மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News September 16, 2025

தி.மலை: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 554 மனுக்கள்!

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 554 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

News September 16, 2025

தி.மலை: சொகுசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து!

image

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் இன்று (செப்.,16) தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!