News September 4, 2025
தி.மலையில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்., 13ம் தேதி நடைபெற உள்ளது. இது வந்தவாசி, ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும். 8th, SSLC, +12, ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறவுள்ளது. மேலும் தகவலுக்கு <
Similar News
News September 6, 2025
தி.மலை: ஜிஎஸ்டி குறைப்பு பற்றி பிரேமலதா பேச்சு

செய்யாறு பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற, உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் செய்யாறு தொகுதியில் தேமுதிகவை வெற்றி பெறச் செய்தால் செய்யாற்றில் மகளிா் கல்லூரி, வேளாண் கல்லூரி, செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் எனவும் அவர் பேசினார்.
News September 6, 2025
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்

அருணாச்சலீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செப்டம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. பௌர்ணமி திதி அன்று அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கி, இரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
News September 6, 2025
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி செப்டம்பர் 7 அன்று விழுப்புரம்–திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரம்–திருவண்ணாமலை (06130): காலை 10.10 மணி புறப்பட – 11.45 மணி வருகை. திருவண்ணாமலை–விழுப்புரம் (06129): மதியம் 12.40 மணி புறப்பட – 2.15 மணி வருகை. 8 பெட்டிகளுடன் இயங்கும் இச்சிறப்பு ரயில், சேங்கம்சபுரம், மணம்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.