News August 28, 2025
தி.மலையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

திருவண்ணாமலை மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News August 29, 2025
திருவண்ணாமலை ராஜகோபுரம் முன் கடைகளுக்கு தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு எந்த வகை கட்டுமானங்களும் அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் உத்தரவிட்டுள்ளனர். பக்தர்களுக்கான மாற்றுத் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைத்துறைக்கு அவகாசம் வழங்கப்பட்டு, வழக்கு விசாரணை செப்டம்பர் 11-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
News August 29, 2025
திருவண்ணாமலை காவல் ஆய்வாளர்கள் இரவு நேரம் ரோந்து பணி பட்டியல்

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை காவல் துறையில் இன்று இரவு ரோந்து பணிக்காக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மற்றும் எந்தவித ஆபத்தான நிலையிலும் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அதனை அடுத்து இந்த ரோந்து பணி பெரும் ஆபத்தான நிலையிலும் காவல் ஆய்வாளர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
News August 28, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.