News September 17, 2024

தி.மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

பௌர்ணமி தினமான நாளை திமலை கிரிவலம் செல்ல பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 300 பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கபடுகிறது.

Similar News

News November 20, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

100 நாள் பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு

image

வந்தவாசி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் செய்யும் பணியையும், அங்கு 100 நாள் பணியாளர்கள் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார். மேலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.