News October 12, 2025

தி.நகர்: நடிகர் T.R வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தி.நகரில் உள்ள டி.ராஜேந்தர் வீட்டுக்கு வெடிகுண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News

News October 12, 2025

தலைமை செயலகத்தில் நாளை அலுவல் ஆய்வு கூட்டம்

image

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நாளை அக்.13-ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அக்.14-ல் சட்டபேரவை கூடுவதால் எத்தனை நாட்கள் நடத்தலாம் மற்றும் முக்கிய தீர்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 12, 2025

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக)அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சலை தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News October 12, 2025

சென்னை சென்ட்ரல் – மாமல்லபுரம் வரை மெட்ரோ படகு சேவை

image

கேரள மாநிலம் கொச்சியில் இருப்பது போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை மெட்ரோ படகு போக்குவரத்து திட்டத்தை தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய நீர்வள ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளதோடு முறையாக பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி தூய்மைப்படுத்துவதற்கான வரைவையும் சென்னை பெருநகரம் சார்பில் சமர்ப்பிக்கவுள்ளது. உங்க கருத்து என்ன?

error: Content is protected !!