News December 12, 2025

தி.குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல: தமிழக அரசு

image

தி.குன்றம் வழக்கு இன்று மீண்டும் <<18541875>>மதுரை HC<<>> அமர்வில் நடைபெற்று வருகிறது. இதில், மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நிர்வாகம் செயல்பட முடியாது என்ற அரசு தரப்பு, தர்கா அருகே தீபம் ஏற்றுவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கக்கூடும் என்றும் வாதிட்டது. இதனையடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று HC தெரிவித்துள்ளது.

Similar News

News December 12, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹7,000 அதிகரித்தது

image

<<18543841>>தங்கம் விலை<<>> ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ₹7,000 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. தற்போது, சென்னையில் வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ₹216-க்கும், ஒரு கிலோ ₹2.16 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் வெள்ளி விலை ₹20,000 வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2025

IPL ஏலம்: அதிரடி ஆல்-ரவுண்டர்களின் லிஸ்ட்..

image

IPL ஏலத்தில், சிறப்பான பினிஷிங் மற்றும் சில ஓவர்கள் பந்துவீசக்கூடிய ஆல்-ரவுண்டர்களை வாங்க அணிகள் முனைப்பு காட்டுகின்றன. இந்நிலையில், முதல் ஆல்-ரவுண்டர்கள் செட்டில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. V.iyer, அட்கின்ஸன், ஹசரங்கா, ரச்சின், லிவிங்ஸ்டனின் அடிப்படை ஏலத்தொகை ₹2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்டர், தீபக் ஹூடாவும் இப்பட்டியலில் உள்ளனர். யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது?

News December 12, 2025

324 சமுதாய மக்களும் வளர வேண்டும்: ராமதாஸ்

image

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், வன்னியர்கள் மட்டுமல்ல 324 சமுதாய மக்களும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து சமூக மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றார். மேலும், இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது என குறிப்பிட்டார்.

error: Content is protected !!