News January 19, 2026

திவ்யா பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

image

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், மகுடம் சூடிய திவ்யா கணேசனுக்கு டிராபி வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாருதி விக்டோரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 2-வதாக சபரி, 3-வதாக விக்கல் விக்ரம், 4-வதாக அரோரா ஆகியோர் இடம்பிடித்தனர்.

Similar News

News January 26, 2026

சங்ககால நட்புடன் மம்மூட்டியை வர்ணித்த கமல்

image

நண்பர் மம்மூட்டி இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார் எனக் கூறி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்து, ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம் என்றும், என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு எனவும் கூறியுள்ளார்.

News January 26, 2026

உலக வரலாற்றில் விஜய்க்கு கிடைக்கும் தனிச்சிறப்பு: KAS

image

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தவெகவிற்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் TN-க்கு வருவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தலைவருக்கு வாக்களிப்பதற்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தமிழர்கள் அணிதிரள்கின்றனர் என்றும், உலக வரலாற்றிலேயே விஜய்க்கு மட்டுமே கிடைத்திருக்கும் ஒரு தனிச்சிறப்பு இது எனவும் கூறியுள்ளார்.

News January 26, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!