News May 22, 2024

திற்பரப்பில் 4வது நாளாக குளிக்க தடை

image

தொடர் மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக  திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரியும் நடைபெறவில்லை.
4வது நாளாக தடை நீடிப்பதால் திற்பரப்புக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்கவும் முடியாமல், படகு சவாரியும் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்புகின்றனர்.

Similar News

News April 20, 2025

குமரி : தபால் துறையில் 453 கோடிக்கு காப்பீடு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு  13,000 வாடிக்கையாளர்கள் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூபாய் 178 கோடியும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய் 275 கோடியும் என மொத்தம் 453 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளனர் என்று கன்னியாகுமரி கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்  தெரிவித்தார்.

News April 20, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9.30 மணி – பூதப்பாண்டி பேரூராட்சி ஈசாந்திமங்கலம் ஊராட்சி, இறச்சகுளம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியதை கண்டித்து இறச்சகுளம் சந்திப்பில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாலை மணி – வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டாறு பாவா காசிம் திடலில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

News April 20, 2025

குமரி: கடனை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

image

சந்தையடி தேரிவிளையைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். இவர் ஜேசிபி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஆதிராஜனுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஹரிஹரசுதன் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஹரிஹரசுதன் கேட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ஆதிராஜன் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆதிராஜனை கைது செய்தனர்.

error: Content is protected !!