News November 16, 2024

திறப்பு அருவியில் 8வது நாளாக குளிக்க தடை

image

பேச்சிப்பாறை, சிற்றார் அணையில் இருந்து 8வது நாளாக இன்றும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் இன்றும் குளிக்க தடை நீடிக்கிறது. தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை காணப்படுகிறது. மேலும் திற்பரப்பு அணைக்கட்டு நிரம்பி வழிவதால் படகு சவாரியும் நடக்கவில்லை.

Similar News

News March 9, 2026

குமரி கடலில் 1,448 ஆமை குஞ்சுகள்

image

குமரி மாவட்டத்தில் லெமன் கடற்கரை ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல் ஆகிய இடங்களில் முட்டையிடப்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு லெமூர் கடற்கரை மற்றும் துவாரக பதி கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டன. இதில், 1448 குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக நேற்று கடலில் விட்டனர்.

News March 9, 2026

குமரி: போலி நகை வைத்து ரூ.4.50 லட்சம் மோசடி

image

படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி( 63). இவர்
நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடையில் குளிச்சாணி பகுதியைச் சேர்ந்த வித்யாதரன் (48) மற்றும் நெயாற்றின் கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ஆகிய இருவரும் 111.90 கிராம் போலி தங்க நகையை அடகு வைத்து சுமார் ரூ.4.50 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2026

மழைநீர் ஓடையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

image

ஏற்றக்கோடு புத்தன் விளையை சேர்ந்தவர் சிங் (38). 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கேபிள் வேலை செய்த போது விபத்து ஏற்பட்டு இடது புற கணுக்காலின் கீழ் பகுதி அகற்றப்படது. இந்நிலையில் வீயன்னூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு வந்த சிங் அப்பகுதியில் உள்ள மழைநீர் ஓடையில் விழுந்துள்ளார். இதில் ஏற்கனவே காயம் ஏற்பட்ட காலில் மீண்டும் காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!