News May 4, 2024
திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா

மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த தருணம். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 26, 2025
புதுவை: வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகம், வேலையில்லாத விவசாயப் பட்டதாரிகள் மற்றும் வேளாண் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பெற, உங்கள் பகுதிக்குரிய உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News August 26, 2025
புதுச்சேரி: டாக்டர் தற்கொலை!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பாபு (24), எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக நுழைவு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேஷ்பாபு நேற்று காலை, அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News August 25, 2025
புதுச்சேரி: செல்வ வளம் வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இது சனிபகவான் ஸ்தலமாகவும் அறியப்படுகிறது, இங்கு சனிக்கு உரிய பரிகாரங்களை செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கோயிலுக்குச் செல்வதால் சனி தோஷங்கள் நீங்கி, நல்வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.