News January 9, 2026

திரைபடத்தில் களம் இறங்கிய நாமக்கல் எம்பி!

image

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமாா் கதாநாயகனாக நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் நடித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: அரசியலுக்கு வருவதற்கு முன்பே சிறு, சிறு வேடங்களிலும் நடித்துள்ளேன். அந்த வகையில் டெலிவரி பாய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன் என்றார்.

Similar News

News January 25, 2026

நாமக்கல் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாமக்கல் மாவட்ட மக்கள் 04286281331 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News January 25, 2026

நாமக்கல்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

நாமக்கல் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <>கிளிக் <<>>செய்து ஆன்லைனில் மூலம் மேலும் தகவல் அறிந்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

நாமகிரிப்பேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

நாமகிரிப்பேட்டை போலீசார் தொப்பப்பட்டி பகுதியில் நடத்திய ரோந்து பணியில், சட்டவிரோதமாக மது விற்ற ஜேடர்பாளையம் அழகேசன் மற்றும் பாபு ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 38 மதுபாட்டில்கள் மற்றும் 1,200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!