News March 19, 2024

திருவையாறு: ஆவணமில்லாத ரூ.1,13,800 பறிமுதல்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜு பாண்டி தலைமையில் காவலர்கள் எட்வின் பிரபு, காளிதாசன் குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரெஜி என்பருடைய காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,13,800 பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 22, 2025

தஞ்சாவூரில் 240 டன் குப்பைகள் சேகரிப்பு

image

தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளில் நாள்தோறும் ஏறத்தாழ 110 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்குக்கும், நுண் உரக் கிடங்குகளுக்கும் அனுப்பப்படுகின்றன. ஆனால் நேற்று (அக்.21) அதிகாலை 3 மணி முதல் மாலை 5:30 வரை ஏறக்குறைய 600 தூய்மை பணியாளர்கள் தொடர் மழையிலும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 55 வாகனங்கள் மூலம் ஏறத்தாழ 240 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

News October 22, 2025

தஞ்சை: இந்திய அஞ்சல் துறையியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 22, 2025

தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தை அஇஅதிமுக பொதுச்செயலாளரான, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். உடன் அதிமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட அதிமுக நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!