News April 1, 2024

திருவிழா நடத்த மறுப்பு, பொதுமக்கள் சாலைமறியல்.

image

புத்தனா நத்தம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் மாநில நெடுஞ்சாலை உள்ளதால் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோயிலை நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றிக் கொள்ள கூறப்படுவதாக தெரிய வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த போலீஸ் மற்றும் வருவாய் துறையில் அனுமதிக்கவில்லை இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Similar News

News September 19, 2025

திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

image

கரூர் மாவட்டம், நல்லூர் போதைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (31). இவர் கடந்த 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோகன் ராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News September 19, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் நாளை (செப்.19) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முசிறி ஒன்றியம் தா.பேட்டை லட்சுமி மஹாலிலும், மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் சமுதாயக்கூடத்திலும், புள்ளம்பாடி ஒன்றியம் டி.சங்கேந்தி சமுதாயக்கூடத்திலும், துறையூர் ஒன்றியம் முருகூர் பாலாஜி மஹாலிலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!