News August 3, 2024

திருவாரூர் 6 மாதம் கால அவகாசம்

image

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்த, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக ஆக.1 முதல் 31.01.2025 வரை ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 12, 2025

திருவாரூரில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (செப்.11) இரவு 10 மணி முதல் இன்று(செப்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 11, 2025

திருவாரூர் மக்களே உஷார்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 11, 2025

திருவாரூர்:மழைக்காலங்களில் இந்த எண்கள் முக்கியம்

image

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் தேவைப்படும் அரசின் அவசர உதவி எண்களை அறிந்து கொள்ளலாம். ▶️ மாநில உதவி எண் – 1070, ▶️ மாவட்ட உதவி எண்- 1077, ▶️ அவசர மருத்துவ உதவி – 104, ▶️ விபத்து உதவி எண் : 108 இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!