News November 4, 2025
திருவாரூர்: 400 மது பாட்டில்கள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றின் பேரளம் பகுதியில் காரைக்கால் பகுதியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களும் இரண்டு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார்.
Similar News
News November 4, 2025
திருவாரூர்: சாராயம் கடத்திய இருவர் கைது

நன்னிலம் பேரளம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தி வந்த புதுச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 4, 2025
திருவாரூர்: காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2025 – 2026ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 15.11.2025-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பயிர் காப்பீட்டுதல் கட்டணமாக சம்பா நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1393 செலுத்தி, விவசாயிகள் பயனடையலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
News November 3, 2025
திருவாரூர்: வாக்குச்சாவடி பயிற்சியில் ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


