News November 11, 2025

திருவாரூர்: 22 பவுன் நகை திருடிய நபர் கைது

image

திருவாரூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர்-ஜெயசுதா தம்பதியர். இவர்கள் இருவரும் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அக்.16-ம் தேதி பணிக்கு சென்ற நிலையில், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள் திருட்டபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் நகையை திருடியது சேலத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 11, 2025

திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

மன்னார்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, நவ.4-ம் தேதி காணவில்லை என மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்ததில், திருநெல்வேலியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிறுமியிடம் பழகி, சிறுமியை நெல்லைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

News November 11, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 10, 2025

திருவாரூர்: மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட நிர்வாக குழு, ஒன்றிய, நகர செயலாளர் கூட்டம் வரும் நவ.,15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நாகை எம்.பி செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் கேசவராஜ் முன்னிலையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!