News July 16, 2024

திருவாரூர்: 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்

image

சோழபுரம்-தஞ்சாவூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வேதாரண்யம் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான நீர் உந்துக் குழாயை மாற்றுப் பாதையில் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 18.07.2024 மற்றும் 19.07.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 10, 2025

திருவாரூர் பள்ளிகளில் தொடங்கிய காலாண்டு தேர்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலாண்டு தேர்வு தொடங்கியது. மாநில பள்ளி கல்வித் துறையின் அட்டவணை படி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கி 25-ம் தேதி வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

News September 10, 2025

திருவாரூர்: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!