News April 2, 2025

திருவாரூர்: 10-ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அறிவிப்பு

image

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே நாளில் நடக்க இருக்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி  நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News April 3, 2025

திருவாரூர் திட்டப் பயனாளிகள் குறைகளை தெரிவிக்க அழைப்பு 

image

திருவாரூரில் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைபாடுகள் இருப்பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூர் 7402607529, நன்னிலம் 7402607533, குடவாசல் 7402607538, கொரடாச்சேரி 7402607442, வலங்கைமான் 7402607566, மன்னார்குடி 7402607554 உள்ளிட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். (SHARE பண்ணவும்)

News April 3, 2025

திருவாரூரில் உதவி தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு 

image

திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மே.30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணைப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள். 

News April 3, 2025

மாணவர்களுக்கான கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம்

image

திருவாரூர் ஹாக்கி யூனிட், ASM ஹாக்கி கிளப் மற்றும் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல் நிலைப் பள்ளி இணைந்து நடத்தும்
மாணவர்களுக்கான கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம்
27.04.2025 முதல் 18.05.2025 வரை திருவாரூர் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் 7 முதல்18 வயது வரை உள்ள
மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது
பயிற்சி நிறைவில் சான்றிதழ் உண்டு தொடர்பிற்கு:8940266129

error: Content is protected !!