News September 8, 2025
திருவாரூர்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

திருவாரூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். SHARE IT NOW…
Similar News
News September 9, 2025
தீண்டாமை சுவர் அகற்ற ஆட்சியர், எஸ்.பி-யிடம் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள கோவில்பத்து என்கிற கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியை மறைத்து எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை உடனடியாக அகற்றக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது.
News September 9, 2025
சுற்றுலாதுறை விருது பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுலா துறை சம்பந்தப்பட்ட தொழில்புரிவோரக்கான விருதுகள் பெற செப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு திருவாரூர் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 7397715679 என்கிற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
பாஜக திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பட்டியல் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓப்புதலுடன் மாவட்ட தலைவர் விகே செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட துணை தலைவர்களாக எஸ்.பி அன்பழகன், வேதநாயகி, பக்கிரிசாமி, ரமாமணிபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர்களாக செந்தில்குமார், கனிமாறன், ஜெயந்தி ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.