News December 14, 2025
திருவாரூர்: வேளாண் அலுவலகம் முற்றுகை அறிவிப்பு

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சம் என்று முழுமையாக நிவாரணம் வழங்கிட கோரி வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
Similar News
News December 14, 2025
திருவாரூர்: வனத்துறையினரால் 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தில் இருந்து எடுக்கப்படும் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் பொருள் கைப்பற்றப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்டதை சதீஷ், பாலமுருகன், முருகானந்தம், விவேகானந்தம், ஆனந்தராஜ் என ஐந்து பேர் 2.7 கிலோ எடை கொண்ட 2.5 கோடி மதிப்பிலான கட்டிகளை விற்க முயன்ற போது வனத்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர்.
News December 14, 2025
திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
திருவாரூர்: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

திருவாரூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


