News November 3, 2025
திருவாரூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 3, 2025
திருவாரூர்: வாக்குச்சாவடி பயிற்சியில் ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
News November 3, 2025
திருவாரூர்: 12th போதும்..ரூ.71,900 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 3, 2025
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இணைந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முக்கிய தினங்கள் அறிவித்துள்ளனர். நவ.4 கணக்கெடுக்கும் பணியும் டிச.9 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுள்ளது. இதனால், ஜன.8 வரை பெயர் சேர்த்தல் நீக்கம்; ஜன.31 2026 வரை சரிபார்த்தல்; பிப்.7 2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


