News December 17, 2025
திருவாரூர்: விவசாய கூலித்தொழிலாளி தற்கொலை

முத்துப்பேட்டை, மேலநம்மங்குறிச்சியைச் சேர்ந்தவர் காசிநாதன் (50). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு சமீபகாலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த காசிநாதன் சம்பவத்தன்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் அய்யாதுரை முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பந்திது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 18, 2025
திருவாரூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவாரூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 5.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருவாரூர்: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


